உறவுக்கு நன்றி! ஈரைந்து மாதங்கள் எனைக் கருவறையில் சுமந்திட்ட உறவுக்கும்... இருபத்தொரு வருடங்கள் தன் தோளோடு தாங்கிட்ட உறவுக்கும்... அழகான இவ்வுலகை நல் அறிவால் அடையாளம் காட்டிட்ட உறவுக்கும்... சிறு சண்டைகள் இட்டாலும் பெரும் சந்தோஷம் தந்திட்ட உறவுக்கும்... தோளொடு எனை சேர்த்து பல துயரங்கள் துடைத்திட்ட உறவுக்கும்... மலர் மாலை தான் சூடி வாழ்கை வழி நெடுக சேர்த்திட்ட உறவுக்கும்... வைரமாய் என்னுள்ளே சிறு மழலையாய் உதித்திட்ட உறவுக்கும்... வாழ்கை எனும் பொருள் விளக்க நம்மோடு வாழ்ந்து மறைந்திட்ட பலப்பல உறவுகளுக்கும்... உறங்கும் தலையணை முதல் உண்ணும் உணவு வரை... தான் உழைத்து எனைக் காத்திட்ட ஒவ்வொரு உறவுக்கும்... நிறை என்று வாழும் இவ்வாழ்க்கை குறை என்று என்னுள் இல்லாது இறையாக நின்று உணர்ந்திடும் உறவுக்கும்... நான் கூறும்... நன்றி என்ற ஒர் வார்த்தை போறாது... ஏனோ இம்மனம்... நன்றியென்ற வார்த்தையன்றி வேறு அறியாது!!! நீயன்று அசையாத ஒவ்வொரு அணுவையும் உறவாக நான் எண்ண நல்மனம் கொடு இறைவா..... இப்படிக்கு, ப்ரியா கணேஷ். |
Showing posts with label உறவு. Show all posts
Showing posts with label உறவு. Show all posts
Monday, December 15, 2008
உறவுக்கு நன்றி!
Wednesday, December 06, 2006
இந்த பதிவைப் பற்றி
வணக்கம்,
இந்த பதிவு, நண்பர்கள் மற்றும் உறவு வட்டங்கள்
தங்களுக்குள்ளும் மற்றவர்க்கும் தங்கள் சிந்தனைகளை
பகிர்ந்துகொள்ளக் கூடிய ஒரு தளமாக இருக்கும். இது
ஒரு குழு பதிவாக இருக்கும்.
இதில் பங்காற்றுபவர்களின் பெயர்கள் விரைவில்!
"பேசு பொருள்" , எண்ணத்தின் போக்கில் எது
தோன்றுகிறதோ அவையெல்லாம் இங்கே எழுதப்படும்.
இந்த வலைப்பூவின் பக்கங்களில் சில தமிழிலும்
சில ஆங்கிலத்திலும் இருக்கும்.
எண்ணங்களின் கலவையாய் இருக்கும்,
கவிதைகளும் இருக்கும், கட்டுரை, அலசல்கள் மற்றும்
பொது நிகழ்வுகள் குறித்தும் இங்கே எழுதப்படும்.
தகவல் மற்றும் எண்ணங்களின் பரிமாற்றங்கள்
மட்டுமே இங்கே இருக்கும்.
பிற பின்.
அன்புடன்.
நம்பி. பா.

Subscribe to:
Posts (Atom)