Wednesday, December 17, 2008

தூக்கம் வேண்டி

தூக்கம் வேண்டி

செல்வம் தான்

வாழ்க்கை எனத்
தேடி நிதம்
நான் சேர்த்தேன்...

அரண்மனை வீடமைத்து
67 அறைகள் வைத்து
தங்கக் கட்டிலில் விரிக்கப்
பட்டுக் கம்பளம்...

மெல்லிய இசைதனில்
மல்லிகை மணத்துடன்
உறக்கம் தேடி
நான் செல்ல...

தூக்கம் என்னை
துரத்தி விட்டு
தழுவிக் கொண்டது என்
வீட்டுத் தோட்டக்காரனை...

எள்ளி நகையாடியது உள்மனம்!!!

ஆற்றப் போவது
பசியை அதில்
2 ரூபாய் அரிசியென்ன?
200 ரூபாய் அரிசியென்ன?

கோடிகள் விலை கொடுத்து
தூக்கத்தை தேடுகிறாய்
ஏழையவள் கந்தலை --- உன்
கைக்குட்டை மறைக்க கொடு....

அந்த காத்தாயி
தாலாட்டு உன்னை
கண்ணுறங்க செய்யுமென்று!!!!!

-----
ப்ரியாகணேஷ்

6 comments:

நம்பி.பா. said...

//கோடிகள் விலை கொடுத்து
தூக்கத்தை தேடுகிறாய்
ஏழையவள் கந்தலை --- உன்
கைக்குட்டை மறைக்க கொடு....

அந்த காத்தாயி
தாலாட்டு உன்னை
கண்ணுறங்க செய்யுமென்று!!!!!//

ப்ரியா,
மிக அருமையான, சொல்லப்போனால் பாதிக்கக்கூடிய வரிகள்!
பணத்தைக் குத்திக் கிழிக்கறீங்க! நல்லா எழுதியிருக்கீங்க. வாழ்த்துக்கள்!

priya said...

அருமையான பதிவு! எல்லோருக்கும் பரிட்சயமான கருத்தாக இருந்தலும் உங்கள் வரிகள் மிகவும் புதுமை.

நல்ல 'நாட்டு வெடி' உங்க சரக்கு!

-Priya V

Priya said...

மிக்க நன்றி நம்பி.இவை சுயநலம் தவிர்த்த செல்வம் வேண்டி எழுதிய வரிகள்.

Priya said...

மிக்க நன்றி ப்ரியா. நாட்டு வெடி என்றாலும் ஊத்திக்காம இருந்தால் சரி.....

Roja said...

migavum arumai. Priya, u have inspired me. it was good.

Priya said...

Thanks Rajesh.